சனி, 23 மார்ச், 2013
ஞாயிறு, 10 மார்ச், 2013
சூது (ஓ )ஆட்டம்
போராடும் பொழுதாவே புலருது ஒவ்வொரு தித்திகாத திங்களும் ..
கானல் நீருல நீந்த சொல்லி கேட்குது கல்வி.
விண்மீனுக்கு தூண்டில் போட்டு நெச மீன கேட்டு நிக்குது பட்டப்படிப்பு
விண்மீனுக்கு பதிலா மின்மினிய புடித்திட பாக்குது சுய புத்தி ..
தொட்டாசிணுகி -ன்னும் கிணத்து தவளனும் கொத்தி கீழ் இறக்க பாக்குது சில
பரமபத பாம்புக..
தொட்டாசிணுகி சிணுங்கிறதும் சுருங்குறதும் அத பொருத்த மட்டும் தற்காப்பு கலை -ன்னும் ,
கிணத்து தவளை உலகறியாது -ன்னு சொன்னவக கிட்ட
உலகமும் அறியாது தவளை மட்டும் அறிந்த கிணத்து உலகத்த-ன்னும்
சொல்லி சொல்லி பலவீ னத்திலும் பலத்த பாத்துகிட்டோம்.
முகம் பாத்து வாள் வீசும் எதிரிகள கண்டு பயமில்ல என்றாலும்
முதுகு பக்கம் குழி வெட்டும் துரோகிகள கையாள துணிவில்ல என்பது தான் உண்மை .
அவன் கஷ்டம் அவனுக்கு என சொல்லி துரோகியையும் தியாகியா நெனச்சதலோ என்னவோ பழிச்சு கட்டுது ஒரு கூட்டம் பொழைக்க தெரியாதவங்க-ன்னு
பொழைக்க தெரியுமா தெரியாதா -ன்னு கேட்டும் பார்த்தேன் புத்திக்கு புடிபடல விடை .
மத்தவங்க பொழப்புல மண் அள்ளி போட தெரியாதுன்னு உறுதியா சொல்லுது உள் மனசு.
வாழ்க்க பாதையில சூதோடும் வாதோடும் ஓடும் துரோகிகளுக்கும் ஒதுங்கி நின்னு வழி கொடுத்து நிதானமா பொடி நடையா போகுது எங்க பொழப்பு..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

