மாலை வேளையில் பேருந்து நிறுத்தத்திற்கு கையில் பரீட்சை பேப்பரையும், களைத்த முகத்துடனும் வந்த டீச்சரை பார்த்ததும்,
புருவங்கள் உயர்த்தி சீருடையின் விளையாட்டின் சின்னமான மண் புழுதியை தட்டிவிட்டு , தலை கோதிய படியே பத்து அடி எட்டி சென்று,பார்வை படாமல் கை கட்டி நின்றவன்,
ஒரே பேருந்தில் முன் படியில் அவனும் பின் படியில் டீச்சரும் ஏறி எதிர்பாரத விதமாய் எதிர்பட்ட போது, 'மாட்டிக்கிட்டேனா இன்னைக்கு' என்ற மனநிலையில், சட்டென்று
"good morning miss,
good afternoon miss
good evening miss"
இதில் எதுவும் கை கொடுக்காத நிலையில் அவனை மறந்த அனிச்சை செயலாய் அகன்று விரிந்த விரல்களும் நெற்றிக்கு முட்டுக்கொடுத்து நின்றது.. அவள் அவனை கண்ணெடுத்தும் பார்க்காமல் இலக்காய் இருந்த இருக்கையை பாய்ந்து ஓடி பிடித்து "அப்பாடா" என்று அமர்ந்த வேளையில் "அப்பாடா தப்பிச்சேன்டா சாமி" என்ற அச்சிறுவனின் மௌன மொழிக்கு ஒலி கொடுத்தது அப்போது அவன் விட்ட பெரும் மூச்சும், வட்டமிட்டு அயர்ந்த அவன் விழிகளும்...
இதை பார்த்த தருணத்தில்
உதட்டில் சிரிப்பையும், உள்ளத்தில் 1997 -இல் இருந்த என்னையும் வரவழைத்து சென்றான் அச்சிறுவன்..:):)
சனி, 1 டிசம்பர், 2012
பழைய நான்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
எனக்கும் அந்த அனுபவம் உண்டு .. ஆசிரியர்கள் கண்ணில் படாமல் ஓடி போய் விட வேண்டும் என உள்ளம் என்றுமே துடிக்கும் ;)
Bad donkeys. small wall..:D
கருத்துரையிடுக